Sunday, July 1, 2007

சாதியை ஒழிப்போம்

இரா.முத்துராஜ், பி.இ.

இனி ஏனடா இந்தச் சாதி?
இது தானா உங்கள் நீதி?
விடியாத இரவுக்குள்ளே-நாம்
வீழ்ந்து கிடந்தது போதும்.

நெடிதாக விரிந்த வானம்-உன்
நெற்றியின் வியர்வை குடிக்க;
படியாத இந்த பூமி;
பாதச் சுவடுகள் பதிக்க.

ஏங்கித் தவிக்குதடா-இன்னும்
எத்தனை தவங்களடா?
பொறுத்தது போதும் எழந்திரு;
புதுவிடியலைத் தேடி புறப்படு.

சலுகைகள் ஏற்க வேண்டாம்;
சம உரிமையை மீட்க வேண்டும்;
ஏழை பணக்காரன் இடைவெளி;
இனி முடிந்துபோன இறைபலி.

அடிமை விலங்கு அற வேண்டும்;
ஆதிக்கத்தின் தலை விழ வண்டும்;
கொடுமைப் பிணிகள் இனியில்லை-இது
கோரத் தாண்டவ முடிவெல்லை.

ஒன்றாய் பிறந்தவர் நாங்கள்;
ஒருதாய் மக்கள் நாங்கள்-என்று
சங்கதி சொல்லி பாடு-இது
சமத்துவ கவிதையின் வீடு.

கவிஞர் இளம்தென்றல் (எ) இரா.முத்துராஜ்
பி.இ. (எலக்ட்ரனிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ்)
3-ம் ஆண்டு,
ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி,
மேல்மருவத்தூர்.

No comments: