உனது மணக்கோல
நினைவுகளே - என்னை
அலங்கோலமாக்கிவிட்டன!
உன்னை நினைத்த
பாவச் செயலுக்காக - என்னை
நித்தம் நித்தம் நானே
சிலுவையில் அறைந்துகொள்கிறேன்!
மரிக்கவும் மன்னிக்கவும்
நான் ஏசு கிறுஸ்துவல்ல;
நடந்ததை மறப்பதற்கே - என்னுள்
மரணப் போராட்டம்.
என் இதயத்தை சிலுவையில்
அடித்துவிட்டு அந்த ரத்தத்திலா
நீ பொட்டு வைக்கிறாய்...
முற்றுப்புள்ளிகூட இல்லாமல்
முடிகின்றது - இந்த
அப்பவியின் கல்லறை காதல்...
2 comments:
நல்லாதான் இருக்கு ஜெயபிரகாஷ்
எனக்கும் இது சொந்த அனுபவம்
நண்பர் ராஜாவுக்கு, உங்களுக்கும் சொந்த அனுபவமா?
Post a Comment