Sunday, October 11, 2009

வதை முகாம்களுக்கு அனுமதி மறுப்பு

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகாம்களுக்கு செல்ல முடிகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


புதினம்.காம் வெளியிட்ட செய்தி


இந்திய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கி இருக்கும் வன்னி வதை முகாம்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படும் அதேநேரம், இலங்கை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மக்களைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டு அரசிடம் விண்ணப்பித்திருந்த போதும் இதுவரை அந்த அனுமதி வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி இருக்கின்றது கொழும்பு வார ஏடான 'சண்டே ரைம்ஸ்'.
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்துப் பேசியபோது முகாம்களுக்கு செல்வதற்கு தமக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.

கோரிக்கை விடுத்து ஒரு மாதமாகி விட்ட நிலையிலும் அவர்களுக்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. "முகாம்களுக்கு செல்வதற்கான அனுமதி குறித்த எமது கோரிக்கைக்கு அரசு இன்னும் பதிலளிக்கவில்லை" என்றார் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

இதேபோன்றே எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகாம்களுக்கு செல்வதை அரசு ஏன் தடுக்கிறது என்பது தொடர்பில் விளக்கம் தருமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்றம்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. எதிர்வரும் 27 ஆம் நாள் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது.
இவ்வாறு இந்திய  நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகாம்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகையில், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் அங்கு செல்ல அனுமதிக்கப்படாமை அவர்களின் சிறப்புரிமைகளை மீறும் செயல் என்று ஐக்கிய தேசியக் கட்சி கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.

Friday, September 25, 2009

நாளை வருவன் ஒரு மனிதன்



புரட்சிக்கமால், மட்டக்களப்பு

நாளை வருவன் ஒரு மனிதன்;
ஞாலத் திசைகள் கோலமிட
நாளை வருவன் ஒரு மனிதன்.

உள்ளத் தெளிவின் நிலவினிலே
ஒளிரும் நினைவாம் சுடரினிலே...
வெள்ளப் புனலின் கலப்பினிலே
விடியற் பரிதி உருவினிலே
நாளை வருவன் ஒரு மனிதன்!

காலச் சுழலின் சுழிதனிலே
கலந்து சுழலும் மேதையரின்
கோலக் கனவின் கருக்குழியில்
கோடி காலம் குடியிருந்தான் ...
நாளை வருவன் ஒரு மனிதன் !

மாநிலத்துக் கழனியினை
மாற்றி யுழக்கி வரப்பிட்டு
ஏணி பெற்ற வாழ்க்கையினை
எரிவிட்டாக்கும் நல்லுழவன் ...
நாளை வருவன் ஒரு மனிதன்!

சாதி ஒன்றாய் நிறமொன்றாய்
சமயம் ஒன்றாய் மொழியொன்றாய்
நீதி ஒன்றாய் நிலையொன்றாய்
நிரைகண் டாளும் விஞ்ஞானி
நாளை வருவன் ஒரு மனிதன்!

வானக் கூரைப் பந்தலின் கீழ்
வையகத்துப் பெருமனையில்
மானிடத்தின் பிள்ளைகளை
மருவி மகவாய் விருந்தோம்ப...
நாளை வருவன் ஒரு மனிதன்!

Wednesday, September 23, 2009

எஸ்.எம்.எஸ். கவிதைகள்

நான் மூடன் அல்ல
இருந்தலும் கிளி ஜோசியம் பார்க்கிறேன்.
கிளியின் ஒரு நிமிட
விடுதலைக்காக!

கவிதைகளை வா
சிப்பது மட்டுமல்ல
நேசிப்பதும் சுகம்தான்!-ஆம்
நான் நேசிக்கும் அழகான

கவிதை நீ!

உன்னைவிட்டு பிரியும்போது-நான்
தனியே பேசிக்கொள்கிறேன்.
என் நிழலுடன் அல்ல-உன்
நினைவுகளுடன்.


உன்னை கண்ட நாள் முதல்
நட்பு கொண்டேன்-பின்பு
காதல் கொண்டேன்!
நட்பு உன் மீது-காதல்
நம் நட்பு மீது. 

இது புது மொழி

மலை  மீது ஏறிநின்றால் மலைகூட நம் காலுக்கு கீழ்தான்

புத்தர்

கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனை

Saturday, July 4, 2009

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா?

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா? சிங்கள ராணுவத்தால் காட்டப்பட்ட உடல் பிரபாகரனனுடையது தானா? என ஏற்கனவே நிறையபேர் எழுதிவிட்டார்கள். அலசிவிட்டார்கள். இருந்தபோதிலும் என் பங்குக்கு இதை பற்றி எழுதியாக வேண்டுமென, என் உள்மனம் உந்துதலினால் இதை எழுதுகிறேன்.

கொரில்லா தலைவர்களின் மரணங்கள் எப்போதுமே சர்ச்சைகளை கொண்டவை. அவர்கள் பூத உடலை காட்டினாலும் அவரது விசுவாசிகள் நம்புவதென்பது முடியாத காரியம். அதற்கு காரணம் அந்த தலைவர்களின் மீது வைத்திருக்கும் அன்பும் நம்பிக்கையும்தான்.
பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் வன்னிப் போரின் கடைசி தினங்களை நன்கு புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

போரின்போது சிங்கள அரசு இரண்டு போர்நிறுத்தத்தை அறிவித்தது. ஒன்று பிப்ரவரி 1லி ருந்து 3ஆம் தேதி வரையிலான மூன்று நாள் போர் நிறுத்தம். மற்றொன்று ஏப்ரல் 3ஆம் தேதியும், 14ஆம் தேதியுமாக இரண்டு நாள் போர்நிறுத்தம். இரண்டு போர் நிறுத்தத்திற்கான நோக்கமானது பாதுகாப்பு வளையத்திலிருந்து பேருக்குதான் அது பாதுகாப்பு வளையம். ஆனால் உண்மையிலேயே அது தான் போர் வளையம். பொதுமக்களை வெளியே கொண்டு வருவதற்காகதான் என கூறப்பட்டாலும், போர்நிறுத்தத்தின் போது தொடர்ந்து ராணுவம் தாக்குதலை நடத்திதான் வந்தது. பிப்ரவரி போர்நிறுத்தத்தில் படைகளை
ஒழுங்குபடுத்துவதற்கும், ஏப்ரல் போர்நிறுத்தத்தில், ராணுவத்திற்கான பதுங்குக் குழிகள் வெட்டவும், படை பிரிவை மாற்றுவதற்கும் பயன்படுத்திக் கொண்டது.
பிரிகேடியர் பிரசன்ன டிசில்வா 55ஆவது டிவிஷன் படையிலிருந்து 59ஆவது டிவிஷனுக்கு மாற்றி கொண்டார். இந்த டிவிஷன் பாதுகாப்பு வளையத்தின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி முன்னேறுமாறு நிறுத்தப்பட்டது. 58ஆவது டிவிஷனுக்கு பிரிகேடியர் சவிந்திர சில்வா தலைமையேற்றார். இது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி முன்னேறுமாறு நிறுத்தப்பட்டது. 53ஆவது டிவிஷனுக்கு கமாண்டர் ஜெனரல் கமல் குணரத்தினே தலைமையேற்றார். இந்த டிவிஷன் படைப்பிரிவு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி முன்னேறியது. கிழக்கில் கடல் இருப்பதால் கப்பற்படைகள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. போதாதக் குறைக்கு அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள் பாதுகாப்பு வளையத்தில் நடக்கும் அனைத்து தகவல்களையும் இந்தியாவின் ராடார் கடற்புலிகளின் செயல்பாட்டையும் துப்பறிந்து தந்தன.
சீனாவின் நவீன ரக போர் விமானங்கள் அமெரிக்கா, பிரிட்டனின் ஆயுதங்கள், இந்தியாவின் டாங்கிகள் மற்றும் விமானப்படை பயிற்சிகள் வன்னி போர்களத்தில் சிங்கள ராணுவத்திற்கு மாபெரும் உதவியாக இருந்தன. இவைதான் இறுதிகட்ட தாக்குதலின் போதான போர் சூழல். இவற்றை முழுமையாக பயன்படுத்திக் கொண்ட ராணுவம் மூர்க்கமாக தாக்குதல் நடத்தின. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர். பாஸ்பரஸ் குண்டுகளும் ரசாயன குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன. தொடர் தாக்குதல்களை நடத்திக்கொண்டே, 55ஆவது டிவிஷனும் 58ஆவது டிவிஷனும் இந்திய பெருங்கடல் கடற்பகுதியில் இணைந்தன. 53ஆவது டிவிஷன் ஒசந்தி கடல்பகுதியிலிருந்து பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைய முயன்றது. இந்த சமயத்தில் மக்களும் புலிகளும் பொறியில் சிக்கவைத்து ஒரு பெட்டி இருப்பதுபோல அடைக்கப்பட்டனர்.

2002 அமைதி காலக்கட்டத்தில் ஏராளமான படையினர் திருமணமாகினர். ஆண் படையினர்கள், பெண் படையினர்களுக்கிடையே பல திருமணங்கள் நடைப்பெற்றன. ஏராளமானவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருந்தன. இப்போது அவர்களெல்லாம் விடுதலைபுலிகளுடனே தங்கி இருந்தனர். இவர்கள் மீது இரக்கமற்று கனரக ஆயுதங்களை கண்மூடிதனமாக பயன்படுத்தியது சிங்கள ராணுவம். ஏராளமானவர்கள் இறந்தனர். 800 விடுதலைப்புலிகள் மிகவும் மோசமாக காயமடைந்தனர். அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களில் 2000க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர். இதனை கண்ட புலிகளின் நெஞ்சம் தாங்கவில்லை. தனது மனைவி, குழந்தைகள், பெற்றோர், உறவினர் என கண்முன்னாலேயே இறந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து நெஞ்சம் பதறினர். ஒரு வளையத்திற்குள் சிக்கவைத்து அதில் மிகவும் அடர்த்தியாக இருக்கும் மக்கள் மீது விமான தாக்குதல்களையும், பீரங்கி தாக்குதல்களையும் நடத்திய ராணுவம் உலக வரலாற்றில் உண்டென்றால் அது சிங்கள ராணுவமாகத்தான் இருக்க முடியும். இதை நடத்திய ராஜபக்ஷேவும், அவனது தம்பி கோத்தாபாய ராஜபக்ஷேவும் உலகில் மன்னிக்க முடியாத போர் குற்றவாளிகள்.


விடுதலைப்புலிகளின் தலைவர் எனும் முறையில் பிரபாகரன் ஏதேனும் உடனடியாக செய்ய வேண்டிய நிலையில் இருந்தார். இந்த சிக்கலான சூழ்நிலை பிரபாகரனின் மன அழுத்தம் அதிகரித்திருந்தது. ஆகவே பிரபாகரன் தனது மனதை மாற்றிக் கொண்டு, கேபி என்கிற செல்வராஜா பத்மநாபன் (விடுதலைப்புலிகளின் சர்வதேச செய்தி தொடர்பாளர்) பேசி மூன்றாம் தரப்பிடம் சரணடைந்து விடுகிறோம் என கேட்டுக்கொண்டார். கேபியும் அவ்வாறே அறிவித்தார். அமெரிக்காவும், இங்கிலாந்தும் இந்த யோசனைக்கு உடன்பட்டன. இலங்கை அரசை புலிகளின் கருத்தை பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டன. இலங்கையோ தனது நிரந்தர கூட்டாளிகளான சீனா, பாகிஸ்தானையும் சந்தர்ப்பவாதக் கூட்டாளியான இந்தியாவிடமும் சொல்லி, அதை மறுக்க சொன்னது. இந்தியாவும் தனது பங்குக்கு மேற்கத்திய நாடுகளிடம் இலங்கைக்கு வக்காலத்து வாங்கியது. முடிவு அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே நாடுகள் மௌனமாகின. இப்போது சிங்கள ராணுவம் தன்னை கச்சிதமாக புதுக்குடியிருப்பில் நிலை நிறுத்திக் கொண்டது.
புலிகளை ஒழிக்க இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட தயாராக இல்லை. இருப்பினும் ஏற்கனவே முடியாத ஒரு நிபந்தனையை விதித்தனர். அது விடுதலைபுலிகள் மூன்றாம் தரப்பிடம் சரணடைய அனுமதிக்க மாட்டோம். ராணுவத்திடமே சரணடைய வேண்டும் என இலங்கை அரசு கூறிவிட்டது. கேபி நாங்கள் ஆயுதங்களை மௌனவிக்கிறோம் எங்களின் அமைதி பேச்சை இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை என அறிக்கை விட்டார்.
இந்த நேரத்தில் பிரபாகரன் புலிகளின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி மூன்று பிரிவுகளாக பிரிந்து செயல்படுவது, முதல் பிரிவு பிரபாகரன் உள்ளடக்கிய ஒரு குரூப் ராணுவ முற்றுகையை உடைத்துக்கொண்டு நீந்திக் கடலை தாண்டி பரந்தன் - முல்லைத்தீவு ரோடு அல்லது A- 35 நெடுஞ்சாலை சென்றுவிடுவது. அதன்பிறகு வன்னிக் காடுகளில் மறைந்திருந்து இயக்கத்தை நடத்துவது.
இரண்டாவது பிரிவு ராணுவத்தை தொடர்புக் கொண்டு சமாதானம் பேசி சரணடைவது. அதிலும் மிக முக்கியமாக அவசர தேவையாக படுகாயமடைந்த புலிகள், குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்களுக்கான மருத்துவ உதவிகளை செய்துகொள்வது.
மூன்றாம் பிரிவு ராணுவத்துடன் அனைத்து சக்திகளையும் திரட்டி பயங்கரமாக மோதுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இரண்டாவது பிரிவான அமைதி பேச்சுவார்த்தை பிரிவுக்கு விடுதலைபுலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் அமைதி செயலர் டைரக்டர் புலித்தேவன் ஆகியோர் முயற்சி மேற்கொண்டார். கேபியும் ஐரோப்பிய தலைவர்களிடமும், அதிகாரிகளிடமும் கேட்டுக்கொள்ள, அவர்களும் கொழும்பை தொடர்புக் கொண்டு விடுதலைப்புலிகளின் கோரிக்கையை கூறினர். மறுபுறம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி மற்றும் ராணுவ செயலர் கோதாபாய ராஜபக்ஷேவிடம் புலிகள் சரணடைவதைப் பற்றி வேண்டினார். அதனை
பரிசீலித்த ராணுவ செயலகம் புலிகள் வெள்ளை கொடிகளை கையில் பிடித்துக் கொண்டு வெளிப்படையாக வரவேண்டுமென தெரிவித்தது. புலிகளும் இதனை ஓப்புக் கொண்டனர். அதன்படியே நடேசன், புலித்தேவன், விசித்திரா (நடேசனின் மனைவி. இவர் ஒரு சிங்கள பெண்மணி). உடன் ஏழு சிங்கள பிணைக் கைதிகள் (கப்பல்படை பிரிவினர்) மற்றும் இவர்களுடன் 35 புலிகளும் வெள்ளை கொடியை பிடித்தவாறு வெளியே வந்தனர்.
முள்ளி வாய்க்கால் பகுதியில் நடேசன் தலைமையில் சரணடைய வந்திருந்த புலிகளையும் நடேசன் மற்றும் அவரது மனைவியையும் ஈவு இரக்கமின்றி கொடூரமாக சுட்டுக் கொன்றது ராணுவம். நடேசனின் கையிலிருந்த வெள்ளைக்கொடி ரத்தத்தால் சிவப்பானது. சரணடைய சென்றவர்களை சுட்டுக்கொன்றது யுத்த தர்மத்தையே மீறிய செயல். இதற்கு நிச்சயம் சிங்கள அரசு என்றாவது ஒருநாள் இதற்கான விலையை கொடுத்தே தீரும்.
நடேசன் கொல்லப்பட்டதை அறிந்த பிரபாகரன் மூர்க்கமான கோபம் கொண்டார். இனி எல்லாம் முடிந்தது. அடுத்த கட்ட தாக்குதலுக்கு தயாராவோம் என கட்டளையிட்டார்.


மே 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. பிரபாகரனுக்கு சூன்யமான நாள். விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் 8 நியூமராலஜிபடி (8, 17, 26) தேதிகளில் பெருத்த பின்னடைவை சந்தித்திருக்கிறார்கள். எட்டாவது எண் அதிர்ஷ்டம் இல்லாத நாளென பிரபாகரன் கருதி வந்தார். துரதிர்ஷ்டமான அந்த 17ஆம் தேதிதான் ராணுவம் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. மூன்று திசைகளிலும் தாக்குதல் நடந்தது. முக்கியமாக 53ஆவது டிவிஷன் நந்தி கடலிலிருந்து தாக்குதலை நடத்தி முன்னேறிக்கொண்டு வந்தது. 55, 58ஆவது டிவிஷன் படைகளும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தின.
இந்த உச்சக்கட்ட தாக்குதலை பானு தலைமையில் உக்கிரமான ஊடறுப்பு தாக்குதலை நடத்தி ராணுவ முற்றுகையை உடைத்தனர். இன்னொரு பிரிவு ஜெயம் தலைமையிலும், மற்றொன்று பொட்டு அம்மன் தலைமையிலும், பிரதியொன்று சூசை தலைமையிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. மூன்று பிரிவுகளிலும் 200லிருந்து 300 வரையிலான புலிகள் இடம் பெற்றிருந்தனர். ஏறக்குறைய அனைத்து புலிகள் தலைவரும் ஊடறுப்பு தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தபோது புலிகளின் அரசியல் பிரிவு சரணடைய முயன்றது.
53ஆவது டிவிஷனில் அலை அலையாக வந்து தற்கொலை படை தாக்குதலை நடத்தினர். ராணுவத்தினர் மீது எகிறி விழுந்து வெடித்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத ராணுவத்தினர் பெருமளவில் கொல்லப்பட, ராணுவ வளையத்தில் இடைவெளி ஏற்பட்டது. இதை உணர்ந்து ராணுவத்தினர் அதிக எண்ணிக்கையில் பின்பக்கம் குவிந்திருந்தது புலிகளின் துரதிர்ஷ்டம். அதனால் ராணுவத்தினர் மீது புலிகள் நடத்திய தாக்குதலை உடனே சரி செய்து கொண்டனர். புலிகள் தீவிர தாக்குதல் நடத்தி ராணுவ முற்றுகையை உடைத்து உள்ளே புகுந்தபோது அந்த இடைவெளியிலேயே இரண்டு படைகளையும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தின. இதனால் புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது. நிறைய புலிகள் ராணுவ வளையத்திற்குள் மாட்டிக்கொண்டனர். பலர் சயனைட் குப்பிகளை கடித்து இறந்தனர். சார்லஸ் ஆண்டனி பிரபாகரனின் மகன் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.

கேணல் சூசை (கடற்படை பிரிவின் தலைவர்) தலைமையில் ஊடறுப்பு தாக்குதல் நடத்தி வெளியேறி வெற்றியடைந்தனர். சூசையின் பிரிவில்தான் பிரபாகரன், அவரது மனைவி மதிவதினி, மகள் துவாரகா (23), இளைய மகள் பாலச்சந்திரன் (11) இருந்தனர். துவாரகா முதலில் மாலதி படைபிரிவிலிருந்து போராடினார். பின்னர் தந்தையுடன் சேர்ந்துக் கொண்டார். பிரபாகரன் குடும்பத்தினர் நால்வருடன் மற்ற 47 பேரும் நந்திக் கடல் ராணுவ வளையத்தை ஊடுருவி சென்றனர். அதே சமயம் முள்ளி வாய்க்காலில் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த புலிகள் பிரிவுக்கு தாங்கள் ஊடறுத்து சென்றுவிட்டதாக தகவல் தரப்பட்டது. இந்த தகவல் கேபிக்கு தெரிவிக்கப்பட்டது. பிரபாகரனுடன் சேர்த்து ஐம்பத்தியென்று நபர்கள் கொண்ட குழு காடுகளில் தங்கியிருந்து திட்டத்தின்படி வன்னிக் காட்டுக்கு செல்வதாக இருந்தனர்.
சூசை, பொட்டு அம்மன் உட்பட அனைவரும் இறந்ததாக ராணுவம் அறிவித்தது.

பிரபாகரனுக்கு அவரது வாழ்க்கையில் அதிர்ஷ்டம் இல்லாத நாளான மே 17ஆம் தேதி சிங்கள ராணுவம் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவித்தது. ஆனால் பிரபாகரனின் உடலை காட்டவில்லை. உலகின் முக்கிய செய்தித்தாள்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் யாரும் இதை நம்பவில்லை. சிங்கள் நாய்களின் எடுபிடிகளை தவிர.
பிரபாகரன் உடல் எங்கே என சிங்கள ராணுவத்திடம் கேட்டதற்கு வீரப்பன் சுட்டு கொல்லப்பட்டபோது தமிழ்நாடு அதிரடி படை தலைவர் விஜயகுமார் சொன்ன கதையை சிங்களவனும் சொன்னது ஆச்சர்யமான விஷயம். ஆம்புலன்சில் ஏறி பிரபாகரன் தப்பியதாகவும் அதனை தெரிந்துக் கொண்ட ராணுவத்தினர் முற்றுகையிட்டு, ராக்கெட் லாஞ்சர் கொண்டு தாக்குதல் நடத்தியதில் பிரபாகரன் உடல் கருகி இறந்துவிட்டார் என கதைவிட்டனர். இந்த கதையை சர்வதேச மீடியாக்களில் கூறினார் ராணுவ பேச்சாளர் உதய நாணயகாரா. ஆனால் ராணுவத்தின் தலைமைக்கு பிரபாகரன் தப்பிவிட்டார் என நன்றாகவே தெரியும். தெரிந்தும் அடர்ந்த காடுகளில் தேடிக்கொண்டிருந்தனர்.

மே 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இலங்கை பாரளுமன்றத்தில் ராஜபக்ஷே "தீவிரவதத்திற்கான போரில் வென்றுவிட்டோம். விடுதலைப்புலிகளை தோற்கடித்து விட்டோம்' என பேசிக் கொண்டிருந்த அதே வேளையில், நந்தி கடல் ஒட்டிய காட்டுக்குள் விஜயபாகு என்ற நான்காவது டிவிஷன் வீரன் ஒருவன் நெற்றியில் வெட்டப்பட்ட பிரபாகரனை போன்ற தோற்றம் கொண்ட பிணத்தை பார்த்தான். அதனை தனது பிரிவு தலைவர் லெப்டினன்ட் கர்னல் ரோகிதா அலுவிகரேவிடம் தெரிவித்தான். இந்த செய்தியினை ராணுவ தலைமையிடம் தெரிவிக்க, சிங்கள சேனல்கள் அடுத்து உலக சேனல்கள் திரும்ப திரும்ப பிரபாகரன் இறந்துவிட்டார் என காட்டியது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையாவென காலம் பதில் சொல்லட்டும்.