Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, December 16, 2015

என் முதல் காதல்

என் முதல் காதல் அவளோடு
சில நேரங்களில் பகலிலும்,
பல நேரங்களில் இரவு மின்னல்
ஒளியிலும் அவள் முகம்
பார்த்திருக்கிறேன்

என் மேல் விழுந்து
மெய்சிலிர்க்க வைத்து
என் உதடு வழி தாகம்
தீர்ப்பவள்
விவரம் தெரியும் முன்பிலிருந்தே
அவளை எனக்கு தெரியும்
பார்க்கும்போது மட்டும் பரவசம் அடைவேன்
கைப்பேசி காதலுக்கு அவள்
ஊரில் வசதியில்லை
நாங்கள் பேசிக் கொள்வது
வருடத்துக்கு சில நாள்கள்
மட்டும்தான்
அவள் வரும்போது முத்தமிட்டும்
காகித கப்பல் விட்டும்
விளையாடுவது உண்டு
அது …. ? இது …..?
சீ …… சீ ….
அப்படியொன்றும் இல்லை.
அவள் புனிதம் கெட்டுவிடக்கூடாது – என்று
நான் புனிதம் காக்கிறேன்.
அவள் என்னை விட்டு
பிரியும்போது எனக்கு
உடல் நலம் சரியில்லாமல் போகிறது
அவள் வருவதைப் பார்த்தால்
எங்கள் வீட்டில் கதவடைத்து விடுவார்கள்
ஜன்னல்கள் உட்பட.
அவளைப் பற்றி கவிதை எழுத
நினைப்பதுண்டு
அவளே கவிதை
அவளைப் பற்றி என்ன
எழுதுவது....
எப்போது திருமணம்?
பொறுங்கள், குழந்தைகளைக் கேட்டு சொல்கிறேன்.
குழந்தைகளா?
இப்பொழுது அவர்கள் தான்
அவளைக் காதலிக்கிறார்கள்.
குழந்தைகள் காதலிக்கிறார்களா...
ஆமாம் மழையை காதலிக்காத
மழலை யாராவது உண்டா?
இப்போது அவர்களுக்கும்
புரிகிறது அவள் மென்மையானவள்
அல்ல கோபப்பட்டால் கொலையும்
செய்வாள் என்று....

Wednesday, September 23, 2009

எஸ்.எம்.எஸ். கவிதைகள்

நான் மூடன் அல்ல
இருந்தலும் கிளி ஜோசியம் பார்க்கிறேன்.
கிளியின் ஒரு நிமிட
விடுதலைக்காக!

கவிதைகளை வா
சிப்பது மட்டுமல்ல
நேசிப்பதும் சுகம்தான்!-ஆம்
நான் நேசிக்கும் அழகான

கவிதை நீ!

உன்னைவிட்டு பிரியும்போது-நான்
தனியே பேசிக்கொள்கிறேன்.
என் நிழலுடன் அல்ல-உன்
நினைவுகளுடன்.


உன்னை கண்ட நாள் முதல்
நட்பு கொண்டேன்-பின்பு
காதல் கொண்டேன்!
நட்பு உன் மீது-காதல்
நம் நட்பு மீது. 

Tuesday, May 13, 2008

காதல் கவிதை

கவிஞர் தாராபாரதி

இதயம் நீயே என் வானம்-உன்
இமைக்கு கீழே என் குடிசை;
உதயம் உனது பூ விழியில்-என்
உலகம் உனது காலடியில்.

முதலில் பார்த்த ஒரு கணத்தில்-நான்
முந்தைய பிறவி தொடர்பறிந்தேன்;
புதுமையான உணர்ச்சியடி-இது
போன பிறவி சொந்தமடி.

கூர்மையான நுன்னறிவு-உன்
குழந்தைப் பேச்சு பிடிவாதம்;
நேர்மையான நன் நடத்தை-உன்
நெஞ்சம் முழுதும் தன்னடக்கம்.

குனத்தில் எனது நகலானாய்-உயர்
கொள்கையில் எனது அச்சானாய்;
மனதில் எனது நினைவானாய்-உயிர்
மங்கை எனது நிழலானாய்.

Monday, April 28, 2008

எஸ்.எம்.எஸ் காதல் கவிதை

உன் கொலுசு சத்தம் கேட்டு
பிறந்த என் கவிதைகள்-உன்
மெட்டிச் சத்தம் கேட்டு இறந்தன.

Thursday, November 15, 2007

எஸ்.எம்.எஸ் காதல் கவிதை

( இக் கவிதைகள் மறுபதிப்பு)

நான் மூடன் அல்ல
இருந்தலும் கிளி ஜோசியம் பார்க்கிறேன்.
கிளியின் ஒரு நிமிட
விடுதலைக்காக!

கவிதைகளை வாசிப்பது மட்டுமல்ல
நேசிப்பதும் சுகம்தான்!-ஆம்
நான் நேசிக்கும் அழகான
கவிதை நீ!

உன்னைவிட்டு பிரியும்போது-நான்
தனியே பேசிக்கொள்கிறேன்.
என் நிழலுடன் அல்ல-உன்
நினைவுகளுடன்.

உன்னை கண்ட நாள் முதல்
நட்பு கொண்டேன்-பின்பு
காதல் கொண்டேன்!
நட்பு உன் மீது-காதல்
நம் நட்பு மீது.

நான் ரோஜாவைப் போல்
அழகானவன் அல்ல-ஆனால்
என் மனம் ரோஜாவைவிட அழகானது;
ஏன் தெரியுமா?
அதில் நீ இருக்கிறாய்!

Sunday, November 11, 2007

எஸ்.எம்.எஸ். காதல் கவிதை


அவளை என் இதயமே என்று-நான்

ஒரு போதும் சொன்னதில்லை...!

அவள் துடித்து நான் உயிர் வாழ்வதா...?

Sunday, October 14, 2007

ஏழைகளின் இரைப்பையை நிரப்புங்கள்

கவிஞர் தாராபாரதி

விதவித மான முன்னேற் றங்கள்
விண்ணைத் தொடுகிற நம்நாட்டில்-பல
வெறும்வயி றுகளோ மண்மேட்டில்!

சுதந்தர தினத்தில் காய்ச்சிய கஞ்சி
சுப்பன் வயிற்றுக்குப் போகவில்லை-அது
சுவரொட் டிக்கே போதவில்லை!

வறுமை தீர்க்கும் வளர்ச்சிப் பணியில்
வாக்குப் பெட்டியில் சோறுவரும்-தினம்
விளம்பரத் தட்டியில் வீடுவரும்!

தருமம் வளர்த்த தாய்த்திரு நாட்டில்
தருமச் சோறு ஒருகவளம்-அது
தவனை முறையில் வரும் அவலம்!

கூரையின் உச்சியில் ஏறிய கட்சிக்
கொடிமரங் களுக்குப் புத்தாடை-தந்தை
கூலியில் வாங்கிய சிற்றாடை!

கூரையின் கீழே சந்ததிகளுக்குக்
கொடியின் நிழலே மேலாடை-தெருக
குப்பைப் புழுதி மெய்யாடை!

`வந்தது விடுதலை' என்பது பாதி
வயிறுக களுக்குத் தெரியாது-அதன்
வாரிசு களுக்கும் புரியாது!

இந்திய நாட்டின் ஒருமைப் பாட்டை
இதயங் களிலே எழுதாதீர்- ஏழை
இரப்பை களிலே எழுதுங்கள்!

விலைமகளின் கண்ணீர்

கவிஞர் தராபாரதி
(மறுபதிப்பு)
பூப்பறியாத பருவத்திலே
பொதுமகளாய் போனவள் நான்;
யாப்பறியாத கவிதை என்னை
யார் யாரோ வாசித்தார்.

எல்லாச் சாதியும் தீண்டுகிற
எச்சில் சாதி என் சாதி;
எல்லா மதமும் கலக்கின்ற
என் மதம் மன்மதம்.

இனிப்புக் கடைநான் தசைப் பிண்டம்;
எல்லோருக்கும் திண்பண்டம்;
குனிந்து வருகிற நீதிபதி;
குற்றவாளியும் அடுத்தபடி.

தனயன் நுழைய முன் வாசல்;
தந்தை நழுவ பின் வாசல்;
முனிவர்களுக்கும் முறைவாசல்;
மூடாதிருக்கும் என் வாசல்.

மந்திரவாதியின் கைக்கோல் நான்;
மந்திரிமார்களுக்கும் வைக்கோல் நான்;
அந்தப்புறங்கள் சலித்தவருக்கு
அசைவ மனைவி ஆனவள் நான்.

நித்தம் ஒரு கணவன் குறைவில்லை;
நிரந்தரக் கணவன் வரவில்லை;
புதுமணப் பெண்போல் தினம்தோறும்;
பொய்க்கு இளமை அலங்கரம்.

தத்துவ ஞானிகள் மத்தியிலே
தசையவதானம் புரிகின்றேன்;
உத்தம புத்திரர் பலபேர்க்கு
ஒரு நாள் பத்தினி ஆகின்றேன்.

மேடையில் பெண்ணறம் பேசிய பின்- வந்து
மேதையும் என்னை தொட்டனைப்பான்;
நான் ஆடைகள் கட்ட நேரமின்றி
ஆண்களை மாற்றி கட்டுகிறேன்.

கூவம் நதிநான் தினம்தோறும்
குளித்த பிறகும் அழுக்காவேன்;
பாவம் தீர்க்க நாள்தோறும்
பத்து பைசா கற்பூரம்.

உப்பு விலைதான் என் கற்புவிலை;
உலை வைக்கத்தான் இந்த நிலை;
தப்புதான் விட முடியவில்லை
தருமம் சோறு போடவில்லை.

-கவிஞர் தாராபாரதி
நன்றி: இது எங்கள் கிழக்கு.

Sunday, September 30, 2007

எஸ்.எம்.எஸ். காதல் கவிதை


பன்னீர் வாசனைதான்...!
எத்தனை பேருக்கு தெரியும்?
அது பல ரோஜாக்களின்
கண்ணீர் என்று...!


நான் தூங்காமல் தவிக்கிறேன்...!
நீ நிம்மதியாக தூங்குகிறாயோ
இல்லையோ என்று...!

Friday, September 14, 2007

காற்றில் வந்த காதல் கவிதை


அறிவியல் காதல்
ஆக்ஸிஜனின் குறியீடு என்ன
என்று ஆசிரியர் கேட்டார்-நான்
உன் பெயரைச் சொன்னேன்;
மாணவர்கள் சிரித்தார்கள்;
ஆசிரியர் திகைத்தார்;
அவர்களுக்கெல்லாம் தெரியாது
நீதான் என் ஆக்ஸிஜன் என்று.

Sunday, August 19, 2007

எஸ்.எம்.எஸ். வாசகங்கள்

எஸ்.எம்.எஸ்ஸில் வந்த வாசகங்கள்)

நண்பனையும் நேசி
எதிரியையும் நேசி
நண்பன் உன் வெற்றிக்குத்
துணையாக இருப்பான்...!
எதிரி உன் வெற்றிக்கு
காரணமாக இருப்பான்...!

எப்போதும் சிரித்துக் கொண்டு
இருக்கும் மனிதனுக்குள் மிகப்பெரிய
சோகம் இருக்கும்.

Friday, August 17, 2007

எஸ்.எம்.எசஸ் வாசகம் - 3

உங்களை பார்த்து எந்த
பெண் ஆவது சிரித்தாளா?
கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்...!
இல்லையென்றால் கொஞ்ச நாளில்
ஊரே உங்களை பார்த்து சிரிக்கும்...!