Saturday, June 30, 2007

அன்புக் காதலி










கவிஞர் தாராபாரதி

பூவிழியில் நானம் பிறக்கும்-அதை
புன்னகையும் வாங்கி வளர்க்கும்;
நாவழியில் அச்சமிருக்கும்-அதை
நகநுனியும் மிச்சம் பிடிக்கும்.

சேர்த்துவைத்து பார்க்கும் விழிகள்-அதில்
சிக்கனத்தை காட்டும் இமைகள்;
வார்த்தைகளை சொல்லும் மனது-அதை
வழிமறித்து கொள்ளும் உதடு.

உச்சிமுதல் பாதம் வரைக்கும்-மொழி
உவமைகளைத் தேடி தவிக்கும்;
கச்சிருக்கும் மார்பின் எடைக்கு-ஓர்
எச்சரிக்கை மங்கை இடைக்கு.

காற்றுபட்டு தேய்ந்த உடம்பு-என்
கண்கள்பட பூத்த அரும்பு;
நேற்று கண்ணில் மாலை கட்டினாள்-என்
நிழலுக்கின்று சேலை கட்டினாள்.

நன்றி: இது எங்கள் கிழக்கு

Friday, June 29, 2007

இலங்கை யுத்தம்










இரும்புக் கருவியின்
இரத்த பசிக்கு
விருந்து படைக்கிறது
தமிழன் இறைச்சி.

மனித வெடிகுண்டாய்-நீ
வெடிக்கும்போது-எங்கள்
மனம்தான் சிதறுகிறது.

எதிரும் புதிருமாய் இருக்கும்
இந்தியவும் பாகிஸ்தானும் கூட
இலங்கைக்கு உதவும் விஷயத்தில்
கைகோர்த்து நிற்கின்றன.

தனிஈழம் என்பது
கனவாகிவிடுமோ?
என்ற வினாமட்டுமே
தொக்கி நிற்கிறது.

Wednesday, June 27, 2007

முழு பூசனிக்காயை மறைத்தல்


கிருபானந்தவாரியார்

ஓர் கிராமத்தில் பூசனிக்காய் திருடன் இருந்தான். அவன் பூசனிக்காய் திருடியே பெரும் செல்வந்தனாகி விட்டான். அவன் வீட்டுக்கும் பூசனிக்காய் திருடன் வீடு என்ற பெயர் நிலைத்துவிட்டது. அவனது சந்ததிகள் நன்றாக படித்து பொறியாளராகவும், டாக்டராகவும் உருவாகி விட்டனர். ஆனால் பூசனிக்காய் திருடிய வீடு என்ற பெயர் மட்டும் மறையவில்லை.
யாராவது இவர்களை தேடி வந்தால்கூட கிராமத்தில் உள்ளவர்கள் பூசனிக்காய் திருடிய வீடா இதோ இங்கே உள்ளது என்று வழிகாட்டினர். இதைக் கேள்விப்பட்டு அந்த மருத்துவரும், பொறியாளரும் பெரும் சங்கடம் அடைந்தனர். இது தொடர்பாக ஞானி ஒருவரை சந்தித்து ஆலோசனைக் கேட்டனர். அவர் வீட்டின் மேல் மஞ்சல் துணியை கட்டுங்கள். யார் பசி என்று வந்தாலும் உணவு கிடைக்கும் என்று எழுதி வையுங்கள். யார் வந்தாலும் இல்லை என்று கூறாமல் உணவு அளியுங்கள் என்றார்.
அதன்படியே செய்து அனைவருக்கும் உணவு அளித்தனர். சில மாதங்கள் கழித்து பொறியாளரையும், மருத்துவரையும் தேடி சிலர் வந்தனர். கிராமத்தில் இவர்கள் வீட்டுக்கு செல்வதற்கு வழி கேட்டனர். சோறு போடுகிறார்களே அந்த வீடா அது இங்கே உள்ளது என்று வழி காட்டினர். பூசனிக்காய் திருடிய வீடு என்பது மறைந்து, சோறு போடும் வீடு என்பது நிலைத்தது. இதுதான் முழு பூசனிக்காயை சோற்றால் மறைத்த கதை.

ஞானத் தீ


ஞனத் தீயில்
நீ எரிகிறாய்--நான்தான்
சாம்பலாகிறேன்.

Tuesday, June 26, 2007

எஸ்.எம்.எஸ் கவிதை-3


அன்பு என்பதற்கு
அர்த்தம் தேடி
அலைந்தேன்-நீ
என்பது தெரியாமல்!

Sunday, June 24, 2007

முதிர் கன்னியின் துயரம்

பாதித் தலைமுடி நரைச்சாச்சு;
பாழும் கனவுகள் கலைஞ்சாச்சு;
காதல் கணவனும் வரவில்லை-என்
கல்யாணமும் கை கூடவில்லை.

வந்த மாப்பிள்ளையோ குறைவில்லை;
சென்ற மாப்பிள்ளைகள் கணக்கில்லை-பொய்
காட்சிக்கு அடிக்கடி அலங்காரம்
கல்யாண சந்தை வியாபாரம்.

உள்ளம் வெறுத்து போயாச்சு-என்
உணர்வுகள் மறுத்து நாளாச்சு;
இதயம் வெடித்து துடிக்கிறது-என்
இளமையை இயற்கை தின்கிறது.

மாப்பிள்ளை நாடகம் முடிஞ்சாச்சு;
முதிர்கன்னி நிலைக்கு போயாச்சு;
நகைகள் வாங்க முடியாமல்-வெள்ளி
நரைகள் வாங்கி நிற்கின்றேன்.

இனி ஏனடா இந்தக் கொடுமை?
மாறுமா பெண்கள் நிலைமை?

Thursday, June 21, 2007

யார் ஞானிகள்?

காவி உடை அணிந்த பாவிகளும், வேதங்கள், உபநிடதங்களை கற்றவர்களும் மட்டுமே ஞானிகள் என்பதை போன்ற பொய்யான தோற்றங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் கூறும் நல்லுலகம் ஞானிகள் என்பதற்கு ஒரு சிறு விளக்கம் மட்டுமே கூறுகிறது. கொதிக்கும் சாம்பாரில் பல்லி விழுந்து விட்டால், சாம்பாருக்காக கவலைப்படுபவன் சாதாரணமானவன். பல்லிக்காக கவலைப்படுபவன் ஞானி. பகுத்தறிவாளர்களால் தூக்கி நிறுத்தப்படும் தமிழ் சில ஆன்மீகவாதிகளால் புறக்கணிக்கப்படுகிறது. தமிழில் வழிபாடு நடத்த போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. தமிழ் தமிழருக்கு ஏற்பட்டுள்ள இந்த அவமரியாதையைத் துடைத்தெறிய விழிப்பபோடு இருங்கள்.

Wednesday, June 20, 2007

ஷேக்ஸ்பியரின் காதல் தத்துவம்

மூளை என்பது நமக்கு கிடைத்த
மிகப்பெரிய கொடை. அது
24 மணி நேரமும்,
வருடத்துக்கு 365 நாள்களும்
வேலை செய்கிறது.
சரியாக காதலிக்கும்போது மட்டும்
வேலை செய்வது கிடையாது.

Tuesday, June 19, 2007

எஸ்.எம்.எஸ். கிறுக்கல் - 2.











நானும் கவிஞனானேன்...!
புலமையால் அல்ல - உன்
புன்னகையால்...!

பார்த்தால் கவிஞனானேன்...!
சிரித்தால் பைத்தியமானேன்...!

Wednesday, June 13, 2007

எஸ்.எம்.எஸ். கிறுக்கல்


மலரே...!
நீ மலரும்போது என்னவளின்
முகத்தை பார்க்கிறேன்...!
நீ உதிரும்போது...
என்னை நான் பார்க்கிறேன்.