கவிஞர் தாராபாரதிபூவிழியில் நானம் பிறக்கும்-அதை
புன்னகையும் வாங்கி வளர்க்கும்;
நாவழியில் அச்சமிருக்கும்-அதை
நகநுனியும் மிச்சம் பிடிக்கும்.
சேர்த்துவைத்து பார்க்கும் விழிகள்-அதில்
சிக்கனத்தை காட்டும் இமைகள்;
வார்த்தைகளை சொல்லும் மனது-அதை
வழிமறித்து கொள்ளும் உதடு.
உச்சிமுதல் பாதம் வரைக்கும்-மொழி
உவமைகளைத் தேடி தவிக்கும்;
கச்சிருக்கும் மார்பின் எடைக்கு-ஓர்
எச்சரிக்கை மங்கை இடைக்கு.
காற்றுபட்டு தேய்ந்த உடம்பு-என்
கண்கள்பட பூத்த அரும்பு;
நேற்று கண்ணில் மாலை கட்டினாள்-என்
நிழலுக்கின்று சேலை கட்டினாள்.
நன்றி: இது எங்கள் கிழக்கு
No comments:
Post a Comment