Wednesday, June 27, 2007

முழு பூசனிக்காயை மறைத்தல்


கிருபானந்தவாரியார்

ஓர் கிராமத்தில் பூசனிக்காய் திருடன் இருந்தான். அவன் பூசனிக்காய் திருடியே பெரும் செல்வந்தனாகி விட்டான். அவன் வீட்டுக்கும் பூசனிக்காய் திருடன் வீடு என்ற பெயர் நிலைத்துவிட்டது. அவனது சந்ததிகள் நன்றாக படித்து பொறியாளராகவும், டாக்டராகவும் உருவாகி விட்டனர். ஆனால் பூசனிக்காய் திருடிய வீடு என்ற பெயர் மட்டும் மறையவில்லை.
யாராவது இவர்களை தேடி வந்தால்கூட கிராமத்தில் உள்ளவர்கள் பூசனிக்காய் திருடிய வீடா இதோ இங்கே உள்ளது என்று வழிகாட்டினர். இதைக் கேள்விப்பட்டு அந்த மருத்துவரும், பொறியாளரும் பெரும் சங்கடம் அடைந்தனர். இது தொடர்பாக ஞானி ஒருவரை சந்தித்து ஆலோசனைக் கேட்டனர். அவர் வீட்டின் மேல் மஞ்சல் துணியை கட்டுங்கள். யார் பசி என்று வந்தாலும் உணவு கிடைக்கும் என்று எழுதி வையுங்கள். யார் வந்தாலும் இல்லை என்று கூறாமல் உணவு அளியுங்கள் என்றார்.
அதன்படியே செய்து அனைவருக்கும் உணவு அளித்தனர். சில மாதங்கள் கழித்து பொறியாளரையும், மருத்துவரையும் தேடி சிலர் வந்தனர். கிராமத்தில் இவர்கள் வீட்டுக்கு செல்வதற்கு வழி கேட்டனர். சோறு போடுகிறார்களே அந்த வீடா அது இங்கே உள்ளது என்று வழி காட்டினர். பூசனிக்காய் திருடிய வீடு என்பது மறைந்து, சோறு போடும் வீடு என்பது நிலைத்தது. இதுதான் முழு பூசனிக்காயை சோற்றால் மறைத்த கதை.

2 comments:

கதிரவன் said...

அட..இதுதான் உண்மையான அர்த்தமா ?

எஸ்.ஆர்.மைந்தன். said...

நண்பர் கதிரவனுக்கு..! உங்களுக்கு இவ்வளவு நாளாக் தெரியாதா? உங்கள் நண்பர்களுக்கு விளக்குங்கள்.