இரும்புக் கருவியின்
இரத்த பசிக்கு
விருந்து படைக்கிறது
தமிழன் இறைச்சி.
மனித வெடிகுண்டாய்-நீ
வெடிக்கும்போது-எங்கள்
மனம்தான் சிதறுகிறது.
எதிரும் புதிருமாய் இருக்கும்
இந்தியவும் பாகிஸ்தானும் கூட
இலங்கைக்கு உதவும் விஷயத்தில்
கைகோர்த்து நிற்கின்றன.
தனிஈழம் என்பது
கனவாகிவிடுமோ?
என்ற வினாமட்டுமே
தொக்கி நிற்கிறது.
14 comments:
nanri
நண்பர் கானா பிரபு அவர்களே...! உங்கள் வாட்டம் தீர்ந்து முகவரி விரைவில் கிடைக்கும். நம்பிக்கையோடு இருங்கள்.
எங்கள் மீது நம்பிக்கையும் அன்பும் வைத்துள்ள உங்களுக்கு ஈழத்தை பரிசாக தருவோம்.
ஒரு ஈழத்தமிழன்
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகின்றோம்.
அருமையான கவிதை.
/*
எதிரும் புதிருமாய் இருக்கும்
இந்தியவும் பாகிஸ்தானும் கூட
இலங்கைக்கு உதவும் விஷயத்தில்
கைகோர்த்து நிற்கின்றன. */
உண்மை.
தரணியில் தமிழன்
தலைநிமிர் நன்னாள்
தமிழ் ஈழம் மலரும்
தமிழரின் பொன்னாள்!
உலகத் தமிழர்
ஓங்கி உறைத்திட
ஈழத் தமிழர்
ஓங்கி உதைத்திட
மலரும் நாளும்
வரைவில் வந்திடும்!
who are they? srilankan army?
நணபர் புயல் தமிழன் அவர்களே..!
விரைவில் கிடைக்கட்டும்.
நண்பர் வெற்றி அவர்களே..! உங்கள் வாழ்த்து கண்டேன். நன்றி.
நண்பர் தமிழன் அவர்களே...! உங்கள் கவிதை நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.
நண்பரே...! சோம்பேறி என்ற பெயரில் எழுதிய தாங்கள் யார்? என்பதை அறிய ஆவல்.
Nanri Nanpare..
ungalai parthal perumayai eruku..
engalukaha nengal thodarnthu eluthanum..
bye..
`nimoworld' என்ற பெயரில் எழுதியிருக்கும் நண்பரே...! உங்களுக்காக கண்டிப்பாக நாங்கள் தொடர்ந்து எழுதுவோம்.
Post a Comment