Thursday, September 20, 2007

ராமர்பால விவகாரம் - இந்தியவுக்கு தலைகுனிவு

இல்லாத ஒரு பாலத்தை பற்றிய சர்ச்சையை ஏற்படுத்தி சேதுசமுத்திர திட்டத்தை முடக்கும் நோக்கில் மதவாத சக்திகள் தங்கள் செயல்பாட்டை முடுக்கிவிட்டுள்ளனர். உலக அளவில் இவர்களின் செயல்பாடு இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுதியுள்ளது.

இராவணன் சீதையை கடத்திச் சென்றபோது ராமர் சீதையை மீட்பதற்கு இலங்கை செல்ல அமைக்கப்பட்டது ராமர் பாலம். இது ராமாயணத்தில் சொல்லப்படும் செய்தி. பல கோடி மக்களின் நம்பிக்கை. இதை நம்பும் மக்கள் யாரும் சேதுசமுத்திர திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சேதுசமுத்திரத் திட்டம் தென்னகத்துக்கு வளம் சேர்க்கும் என்றே நினைக்கின்றனர். ஆனால் மத உணர்வுகளை வைத்துக்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தும் சக்திகள் சேதுசமுத்திர திட்டத்துக்கு எதிராக களம் இறங்கியுள்ளன. இது தென்னகமக்களின் வாழ்வியல் ஆதாரத்தை அழிக்க நினைக்கும் வட இந்திய வெறியர்களின் கூட்டுச் சதி.

இவர்கள் வாதப்படி வைத்துக்கொண்டாலும் ராமர் பாலம் என்று சொல்லும் இடத்தில் வெறும் மணல் திட்டு மட்டுமே உள்ளது. ராமர் சீதையை மீட்ட பிறகு எதிரி படைகள் திரும்ப வராமல் இருப்பதற்கு அவரே பாலத்தை தகர்த்ததாகவும் கூறப்படுகிறது. வால்மீகி ராமாயணத்துக்கு ராஜாஜி எழுதிய உரையில் இச் செய்தி உள்ளது.
ராமர் பாலம் கட்டியதை நம்புபவர்கள், அவரே இடித்ததையும் நம்பித்தான் ஆக வேண்டும்.ஏற்கனவே இடிக்கப்பட்ட பாலத்தை இப்போது இடிக்கக் கூடாது என்று எதற்கு சர்ச்சை. அங்கு வெறும் மணல் திட்டுதானே உள்ளது. நீங்கள் கூறும் ராமபிரான்
உண்மையாக இருந்து, தற்போது உயிருடன் இருந்தால் பயன்பாட்டில் இல்லாத் பாலத்தை(மணல் திட்டை) இடிக்கக் கூடாது என்று கூறுவாரா. உங்களின் செயல்பாட்டுக்கு வெட்கித் தலைகுனிய மாட்டாரா.

இந்தியாவின் வளர்ச்சியை குறிப்பாக தென்னக மக்களின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் இவர்களின் செயல்பாட்டை நாம் ஓரணியில் இருந்து எதிர்க்க வேண்டும். உண்மையில் மதப்பிரச்சாரம் செய்யும் மகான்களிடம் இருந்தும், மக்களிடம் இருந்தும் வரும் கோரிக்கையில் நியாயம் இருந்தால் பரிசீலிக்கலாம். அரசியல் பிழைப்புக்காக மத உணர்வுகளை தூண்டிவிடும் இவர்களை மத்திய அரசு கவனத்துடன் கையாள வேண்டும். இவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கக் கூடாது. சேதுசமுத்திர திட்டத்தை கால தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். இந்த மதவாதிகளின் மோசமான செயல்பாடுகள் உலக அளவில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை எற்படுத்தியுள்ளன.

6 comments:

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நீங்கள் பத்திரிக்கையாளர் என்கிறீர்கள்,சேது சமுத்திர திட்டம் உண்மையில் என்ன வகையாக செயல்படுத்தப் படப் போகிறது,அதன் பொருளியல்,சமுதாய,கடலியல் பயன்கள் மற்றும் பயங்கள் என்ன என்பதை ஒரு பட்டியலிட முடியுமா?
மீடியாக்கள் அனைத்தும் அரசியல் சார்ந்த கருத்துக்களையே தெரிவித்துக் கொண்டிருக்கின்றன...அதையே நீங்களும் வழி மொழியாமல் புள்ளிவிவரத்துடன் எழுதலாமே.......

Thamizhan said...

நீண்ட பல்துறைகள் சார்ந்த ஆய்வுக்குப் பின் தான் பி.ஜே.பி. ஆட்சியும்,தற்போதைய ஆட்சியும் சேது சமுத்திரத் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர்.

மதவாதிகள் முதலில் மீன்கள் பாதிப்பு,அடுத்து மீனவர்கள் மேல் இது நாள் வரை இல்லாத புது அக்கறை,பின்னர் தோரியத்தின் மேல் பாசம்,சுணாமி தடுப்பு என்ற் கதை,அடுத்து அமெரிக்கக் கப்பல்கள் வரும் அபாயம்,புலிகள் பற்றிய பய முறுத்தல்,பொருளாதாரச் சந்தேகங்கள்.

இவை எல்லாவற்றையும் வல்லுனர்கள் வைத்து ஆராய்ந்து ஒன்றும் திட்டத்திற்கு எதிராக இல்லை யென்றதும்,ஒரு இணைய தள்ப் பொய்யன் ஆராய்ச்சியாளனாக இணையத்தில் விடாமல் சிறப்புத் தளம்,நாசா பர்றிய பொய்களை இவர்கள் வித விதமாகத் திரிச்சு சொன்னதை உண்மையென்றே நம்பிவிட்டவர்கள் பல்லாயிரம்.

கடைசியில் ஒரு பருப்பும் வேகவில்லை என்றதும் அவர்கள் ஆதம் பாலத்தை,ராமர் சேது வாக்கினார்கள்.
இப்போது ராமனையேக் கூட்டி வருகிறார்கள்,உச்ச நீதி மன்றத்திற்கு!அய்யோ பாவம் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் உண்மையைச் சொன்னதிற்காக வேலை நீக்கம்.

அமைச்சர்கள் நீங்க வேண்டும்,அரசு நீங்கவேண்டும்.
உலகம் ராமனைப் பார்த்து மட்டுமல்ல,இந்திய விஞானிகளையும்,அனு ஆய்தம் வேண்டும் அதை வாழ்த்தப் பிள்ளையாரும் வேண்டும் என்ற புத்திசாலித் தனத்தை பறை சாற்றி அவமானப் படவைக்கிறார்கள்.

சாலிசம்பர் said...

""இந்தியவுக்கு தலைகுனிவு""

நிச்சயமாக ஜெயபிரகாஷ்.
இந்து மதத்தையும்,கடவுளையும் வைத்துக்கொண்டு முன்னம் ஆட்டம் போட்டவர்கள் இப்போது கேவலப்பட்டுக் கொண்டிருக்கிறர்கள்.

இப்போது ஆடுபவர்கள் பின்னால் கேவலப்படுவார்கள்.

எஸ்.ஆர்.மைந்தன். said...

நண்பர் அறிவன் அவர்களுக்கு, உங்கள் விருப்பப்படி விரைவில் புள்ளி விவரத்துடன் வெளியிடப்படும்.

எஸ்.ஆர்.மைந்தன். said...

நண்பர் தமிழன் அவர்களுக்கு நன்றி. உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

எஸ்.ஆர்.மைந்தன். said...

நண்பர் ஜாலிஜம்பருக்கு நன்றி.