Monday, September 24, 2007

தமிழ்க் கணினி-புதுச்சேரியில் வலைபதிவர் பட்டறை

புதுச்சேரியில் பதிய பதிவர்களுக்கான பயிற்சிப்பட்டறை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 2007, 9 ஆம் நாள் இப்பயிற்சி வகுப்பு நடத்தலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பானது முற்றிலும் புதியவர்களுக்கானதாகும். இதில் தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, ஒருங்குறி எழுத்துறு பயன்படுத்துவது அதற்கான மென்பொருட்களை நிறுவுவது வலைத்தளங்களில் எழுதுவது உள்ளிட்டவற்றுக்கு நேரடி பயிற்சி அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் புதுவையை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் கலந்து கொண்டனர.

இந்த பதிவர்களுக்கு ஏற்படும் தொழில் நுட்ப பிரச்சனைகளுக்கு வழிகாட்டியாகவே இந்த பட்டறையை நடத்துவது என கருதி தொடக்கத்தில் பேசிவந்த நிலையில் பின்னர் புதியவர்களுக்குமாக சேர்த்து மொத்தமாக 100 பேர்களுக்கு இந்த பயிற்சியை இலவசமாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை மாலை என இரு வேளையும் நடைபெறும். காலை கணினி பற்றி பொதுவானத் தகவல்களும், மாலை பதிவர்களுக்கு பயிற்சி அளிப்பது எனவும் முடிவு செய்துள்ளோம்.

இந்த பதிவர் பட்டறை "தமிழ்க் கணினி"" என்ற பெயரில் நடத்துவது எனவும் முடிவு செய்துள்ளோம். இதன் நோக்கம் கணனி முழுமையும் தமிழ்படுத்த வேண்டும் என்பதுமாகும். இதனால், தமிழில் கிடைக்கும் மென்பொருட்களின் தொகுப்பு அடங்கிய குறுந்தகடு அளிப்பது எனவும் முடிவு செய்துள்ளோம். அதனுடன் ஏகலப்பை, உள்ளிட்ட சென்னைப் பதிவர்கள் வழங்கிய மென்பொருட்களும், புதிய மென்பொருட்கள் பலவும் வழங்குவது எனவும் முடிவு செய்துள்ளோம்.

இதில் தமிழ் 99 விசைப்பலகை பயன்படுத்தி தட்டச்சு செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக கணனியில் தமிழ் என்பது தொடர்பான விவரங்கள் அங்கிய ஒரு கணனி மலர் ஒன்று வெளியிடுவது எனவும் முடிவு செய்துள்ளோம்.

தொடக்கமாக கணனி தொடர்பான தொழில் நுட்பம் அறிந்தவர்களை அழைத்து தொடங்கி வைப்பது எனவும் முடிவு செய்துள்ளோம்.

தமிழ் நாடு அரசு செய்துள்ள பல பணிகளை புதுவை அரசும் மேற்கொள்ள வேண்டி வலியுறுத்தும் வகையில் புதுவை முதல்வரை அழைத்து இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவிற்கு அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக "சென்னை வலைப்பதிவுப் பட்டறை" போலவும் அதில் கூறப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான பட்டறையாக இது இருக்கலாம்.

"புதுவை வலைப்பதிவர் சிறகம்" என்ற பெயரிலான அமைப்பு இந்த பட்டறையை நடத்துவது எனவும் முடிவு செய்து
இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழ் ஆர்வலர்கள், கணனி ஆர்வலர்கள், இணையப் பதிவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும், சில திட்டங்களும் பரிசீலனை செய்யப்பட உள்ளது. அது பற்றி பின்னர் விரிவாக தெரிவிக்கப்படும்.

எல்லாமே இலவசமாக இல்லாமல் குறைந்த பட்ச நுழைவுக்கட்டணம் வசூலிப்பது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். இம்முடிவு நிதி என்ற பிரச்சனையை அடிப்படையாய் கொண்டது அல்ல. இவ்வாறு நுழைவுக் கட்டணம் வசூலிப்பது என்பது திட்டமிட்ட 100 பேர் என எண்ணிக்கையை குறைத்து சிறப்பாக செய்ய இயலும் என்பதாலேயே இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு சலுகை உண்டு.

பதிவர்களின் ஆலேசனை வரவேற்கப்படுகிறது.

புதுவை வலைப்பதிவர் சிறகத்திற்காக,

இரா.சுகுமாரன்,
தொடர்பு எண்: 94431 05825

6 comments:

மாசிலா said...

உங்களது முயற்சிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள் இரா. ஜெயபிரகாஷ். நல்ல சேவை.

எனக்கும் புதுவைதான் பூர்வீகம்.

விரைவில் தொடர்பு கொள்வோம். நிறைய செய்ய வேண்டியிருக்கிறது.

நன்றி.

எஸ்.ஆர்.மைந்தன். said...

உங்கள் வாழ்த்து எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது.

முனைவர் மு.இளங்கோவன் said...

அன்புள்ள நண்பர் அவர்களுக்கு
வணக்கம்.
ஆயி மண்டபத்தில் கண்டும்
பேசமுடியாதபடி நேர நெருக்கடி.
தங்கள் பதிவு கண்டு மகிழ்ந்தேன்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி

எஸ்.ஆர்.மைந்தன். said...

நண்பர் மா.இளங்கோவனுக்கு, உங்கள் நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

எஸ்.ஆர்.மைந்தன். said...

நண்பர் மா.இளங்கோவனுக்கு, உங்கள் நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நல்ல முயற்சி. தெளிவான நோக்கம். வாழ்த்துக்கள்