
புண்ணைக் கட்டி அதன் மேல் ஒரு
புடவை கட்டி புதுமைகள் காட்டிடும்
பெண்ணைக் கட்டிக் கொள்வார்-இவர்
கொள்ளிவாய் பேயைக் கட்டிக்
கொண்டாலும் பிழைப்பார்
மண்ணைக் கட்டிக் கொண்டு அழுகின்ற-இம்
மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்
கண்ணைக் கட்டிக் கொண்டு
ஊர் வழிப்போகும் கிழக் கழுதை
வாழ்விலும் கடையெனல் ஆகுமே.
விளக்கம்: எலும்பின் மீது சதையைக் கட்டி, அதற்கு மேல் ஒரு புடவையை கட்டிக் கொண்டு புதுமைகள் காட்டிடும் பெண்ணைக் கட்டிக்கொள்வார், அவர் கொள்ளிவாய் பேயைக் கட்டிக் கொண்டாலும் பிழைப்பார். மண்ணைக் கட்டிக் கொண்டு அழுகின்ற இம் மடப் பிள்ளைகள் வாழ்க்கையை பார்க்கும் போது, கழுதைமீது ஊர் போய்ச்சேர பயணம் செய்பவர்களைப்போல் உள்ளது. அதுவும் கண்ணைக் கட்டிக் கொண்டு செல்லும் கிழக்கழுதை மீது ஊர் போய்ச்சேர பயணம் செய்பவர்களைப் பார்ப்பது போல் உள்ளது என்கிறார் வள்ளலார்.
5 comments:
padippatharkku nandraagave ulladhu..innum vilakkamaaga koorinaal vivaadhathirkku udhavume..
புன்/பென்/மன் ???
என்ன மொழி இது?
நண்பர் ராக்ஸ் அவர்களுக்கு, புரியவில்லையா? இதைவிட என்ன விளக்கமாக வேண்டும்.
நண்பர் ஜீவா அவர்களே, நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? நேரடியாக கூறலாமே.
நண்பர் ஜீவாவுக்கு, தவறுகள் திருத்தப் பட்டுள்ளது. நன்றி.
Post a Comment